search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாட்டில் மக்கள் வெறுப்புக்கு மோடியின் அநீதி தான் காரணம் - ராகுல் காந்தி
    X

    'நாட்டில் மக்கள் வெறுப்புக்கு மோடியின் அநீதி தான் காரணம்' - ராகுல் காந்தி

    • இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது
    • பீகார் அரசியலின் 'நரம்பு மையம்' நாட்டில்மாற்றம் வரும்போது எல்லாம் இங்கு இருந்துதான் தொடங்குகிறது

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) சார்பில் 'ஜன்விஸ்வாஸ்' பேரணி நடந்தது.இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

    இந்த பேரணியில் ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத்யாதவ்,தேஜஸ்வி யாதவ்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றனர்.இந்த பேரணியில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியின் போது ராகுல்காந்தி எம்.பி. பேசியதாவது:-

    பீகார் அரசியலின் 'நரம்பு மையம்'. நாட்டில் மாற்றம் வரும் போது எல்லாம் அது பீகாரில் இருந்துதான் தொடங்குகிறது. இதன் பிறகு இந்த மாற்றம் மற்ற மாநிலங்களை நோக்கி நகர்கிறது. இன்று நாட்டில் சித்தாந்தங்கள் மீது சண்டை நடக்கிறது. வெறுப்பும், வன்முறையும், ஆணவமும் இருக்கிறது. மறுபுறம், ஒருவருக்கொருவர் அன்பு, சகோதரத்துவம் மற்றும் மரியாதை உள்ளது.

    பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டில் வெறுப்புணர்வை பரப்புகிறது.. மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதால் நாட்டில் வெறுப்பு அதிகமாக உள்ளது. நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

    மத்தியஅரசு ஒருசில 10 தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் சில தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை மோடி அரசு தள்ளுபடி செய்து உள்ளது. ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×