என் மலர்
இந்தியா
"ஸ்பேடெக்ஸ்" திட்டம் வெற்றி- வரலாறு படைத்தது இஸ்ரோ
- விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.
- 2 செயற்கைக் கோள்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைக் கோள்ளும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
தொடர்ந்து, ஜனவரி 7ம் தேதி அன்று முதல்முறையாக டாக்கிங் செயல்முறை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. பிறகு. ஜனவரி 9ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
ஆனால், ஜனவரி 9ம் தேதி அன்றும் சிறிய தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் டாக்கிங் சோதனை முயற்சி கைவிடப்பட்டு, தரவுகள் ஆராயப்பட்டு வந்தன.
இந்நிலையில், இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இதைதொடர்ந்து, விண்வெளியில் 2 யெற்கைக்கோள்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.
2 செயற்கைக்கோள்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ககன்யான் உள்ளிட்ட இந்தியாவின் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
SpaDeX Docking Update:?Docking SuccessSpacecraft docking successfully completed! A historic moment.Let's walk through the SpaDeX docking process:Manoeuvre from 15m to 3m hold point completed. Docking initiated with precision, leading to successful spacecraft capture.…
— ISRO (@isro) January 16, 2025