search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகா: கூட்டுறவு வங்கியில் ரூ.12 கோடி கொள்ளை.. பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை
    X

    கர்நாடகா: கூட்டுறவு வங்கியில் ரூ.12 கோடி கொள்ளை.. பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை

    • பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, கருப்பு நிற காரில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
    • கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களிடம் இந்தியிலும், கொள்ளை நடந்தபோது வங்கிக்கு அருகில் இருந்த மாணவர்களிடம் கன்னடத்திலும் பேசினர்.

    கர்நாடகாவில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியில் இன்று காலையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், கோட்டேகர் கூட்டுறவு வங்கிக்குள் நுழைந்தனர். பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, கருப்பு நிற காரில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    25 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கொள்ளையர்கள், வங்கிக்குள் நுழைந்து, ஊழியர்களை மிரட்டி, பணம் மற்றும் தங்க நகைகள் அடங்கிய அலமாரியை திறந்து கொள்ளையடித்துள்ளனர்.

    திருடப்பட்ட தங்க நகைகள், ரொக்கம் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களிடம் இந்தியிலும், கொள்ளை நடந்தபோது வங்கிக்கு அருகில் இருந்த மாணவர்களிடம் கன்னடத்திலும் பேசியதாக மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார். வங்கியின் சிசிடிவி அமைப்பில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநரின் மோதிரத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்று அகர்வால் கூறினார்.

    நாய்கள், கைரேகை நிபுணர்கள் கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முன்னதாக கர்நாடக மாநிலம் பிதர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப நேற்று வேனில் வந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.இதில் வங்கி ஊழியர் உயிரிழந்தார்.

    பைக்கில் வந்த கொள்ளையவர்கள் பணப்பெட்டியை கொள்ளையடித்துச் சென்றனர். இந்நிலையில் நேரடியாக வங்கியிலேயே நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×