search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நகைச்சுவை நடிகர் இந்திரன் 7-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி: 59.4 சதவீத மதிப்பெண் பெற்றார்
    X

    நகைச்சுவை நடிகர் இந்திரன் 7-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி: 59.4 சதவீத மதிப்பெண் பெற்றார்

    • நடிகர் இந்திரன் 7-ம் வகுப்பு சமத்துவ பாட திட்டத்தில் சேர்ந்து படித்து வந்தார்.
    • சினிமா படப்பிடிப்புகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போது பாடங்கள் படித்து வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் குமாரபுரம் பகுதியை சேர்ந்த பிரபல நடிகர் இந்திரன். குடும்பத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக தனது சிறு வயதிலேயே தையல் வேலைக்கு சென்ற இந்திரன், நாடகங்களில் நடித்தார்.

    அதன்பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி, ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்தார். சிறு வயதிலேயே வேலைக்கு சென்றுவிட்டதன் காரணமாக, அவர் 4-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போனது.

    எப்படியாவது பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என்பதை தனது இலக்காக வைத்திருந்த அவர், தற்போது அதனை செயல்படுத்தியிருக்கிறார். அவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுத முயன்று வந்தார். இதற்காக 68 வயதான இந்திரன் கடந்த ஆண்டு (2023) கேரள மாநில சமத்துவ திட்டத்தில் பதிவு செய்தார்.

    17 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் 7-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் பத்தாம் வகுப்பு படிப்பில் சேரலாம். ஆகவே நடிகர் இந்திரன் 7-ம் வகுப்பு சமத்துவ பாட திட்டத்தில் சேர்ந்து படித்து வந்தார்.

    சினிமா படப்பிடிப்புகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போது பாடங்கள் படித்து வந்தார். கேரள மாநில சமத்துவ பாடத் திட்டத்தில் 1,604 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் நடிகர் இந்திரனும் ஒருவர் ஆவார். அவர் உள்பட 1,043 பேர் சமீபத்தில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

    அந்த தேர்வில் நடிகர் இந்திரன் உள்பட 1,007 பேர் தேர்ச்சி பெற்றனர். நடிகர் இந்திரன் 7-ம் வகுப்பு தேர்வில் 59.4 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×