என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்ட மேல்நிலைபள்ளி தேர்வுக்கான கேள்வித்தாள்- ஆசிரியர் சங்கங்கள் போராட்டம்
- நிறம் மாற்றம் காரணமாக மாணவர்களின் தேர்வு திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டினர்.
- கேள்வித்தாள் நிறம் மாறியிருப்பதால் என்ன பிரச்சினை? என்று கேட்டார்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் முழுவதும் மேல்நிலை பள்ளி தேர்வுகள் நேற்று தொடங்கின.
முதல் நாள் மொழிப்பாட தேர்வு நடந்தது. இதில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாள் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு இருந்தது.
வழக்கமாக கறுப்பு நிறத்தில் அச்சிடப்படும் கேள்வித்தாள்கள் இம்முறை சிவப்பு நிறத்தில் அச்சிட்டது மாணவர்களுக்கு வித்தியாச உணர்வை கொடுத்தது.
தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் சிலர் இதுபற்றி பெற்றோரிடம் கூறினர். அவர்கள் கேள்வித்தாள் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபோல எதிர்க்கட்சி ஆசிரியர் சங்கத்தினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த நிறம் மாற்றம் காரணமாக மாணவர்களின் தேர்வு திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டினர். இதற்கிடையே இச்சம்பவத்தை கண்டித்து பெற்றோர் அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கேள்வித்தாள் நிறம் மாற்ற விவகாரம் தொடர்பாக கல்வி மந்திரியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கேள்வித்தாள் நிறம் மாறியிருப்பதால் என்ன பிரச்சினை? என்று கேட்டார்.
மேலும் மேல்நிலை தேர்வு கேள்வி தாளையும், உயர்நிலை வகுப்புக்கான தேர்வுத்தாளையும் வேறுபடுத்தி காட்டுவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.