என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டெல்லி குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்ற காலிஸ்தான் அமைப்பு.. 'வீடியோ'வை பகிர்ந்து பகிரங்க எச்சரிக்கை
- பாகிஸ்தானில் இயங்கும் ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்ற பெயரில் இயங்கும் அந்த டெலிகிராம் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
- இந்திய கோழை ஏஜன்சியும் அதன் எஜமானர்களுக்கும் நமது உறுப்பினர்கலாய்
தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேசிய புலன் விசாரணை அமைப்பு, தேசிய பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டோரும் இதை விசாரித்துவருகின்றனர்.
DELHI ROHINI BLAST CCTV VIDEO#Blast #CRPF pic.twitter.com/RRI3j3ZGg5
— "Journalist" Raushan Rajput (@Raushan523) October 20, 2024
இந்நிலையில் இந்த தாக்குதல் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது என்று டெலிகிராமில் அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்ற பெயரில் இயங்கும் அந்த டெலிகிராம் சேனலில் பதிவிடப்பட்டவை டெல்லி குண்டுவெடிப்போடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
அந்த பதிவில், டெல்லி குண்டுவெடிப்பு வீடியோ இடம்பெற்றுள்ளது. மேலும் கீழே காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாட்டர் மார்க் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி,' இந்திய கோழை ஏஜன்சியும் [Indian coward agency] அதன் எஜமானர்களுக்கும் நமது உறுப்பினர்களை [காலிஸ்தான் ஆதரவாளர்களை] அமைதிப்படுத்த, நமது குரலை நசுக்க கேடுகெட்ட ரவுடிகளை பணம் கொடுத்து ஏற்பாடு செய்யலாம் என்று நினைக்கின்றனர்.
அப்படி நினைத்தால் அவர்கள் முட்டாள்களின் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம் . நாம் அவர்களுக்கு எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறோம் என்றும், நம்மால் என்ன செய்ய முடியும் என்றும், அவர்களால் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது. நம்மால் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த முடியும். #காலிஸ்தான் ஜிந்தாபாத் #ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு குறித்து என்ஐஏ விசாரணையில் இறங்கியுள்ளது.
முன்னதாக கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளதாகவும், லாரன்ஸ் பிஸ்னோய் ரவுடி கும்பலுடன் இந்திய அதிகாரிகள் தொடர்பு வைத்துள்ளதாகவும் கனடா குற்றம் சாட்டியது. மேலும் அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி தொடர்பாக இந்திய உளவுத்துறை [RAW] முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்