search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திரா, தெலுங்கானாவில் காரில் சென்று 41 வீடுகளில் கொள்ளையடித்த கில்லாடி திருடன்
    X

    ஆந்திரா, தெலுங்கானாவில் காரில் சென்று 41 வீடுகளில் கொள்ளையடித்த கில்லாடி திருடன்

    • கடந்த மார்ச் மாதம் ஷேக் காஜா பீரா ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
    • கொள்ளை கும்பல் காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், தர்மாவரத்தை சேர்ந்தவர் ஷேக் காஜா பீரா. ஓவியரான இவருக்கும் 2 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர்.

    ஓவியம் வரைவதில் போதிய வருமானம் கிடைக்காததால் மனைவிகள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் வறுமையில் வாடினார்.

    ஓவியம் வரையும் தொழிலை விட்டுவிட்டு கடந்த 2021-ம் ஆண்டு அனந்த பூரில் திருட்டு தொழிலை தொடங்கினார்.

    இரவு நேரங்களில் நோட்டமிட்ட வீடுகளில் சென்று நகை பணத்தை கொள்ளை அடித்தார். திருட்டு தொழிலில் ஷேக் காஜா பீராவுக்கு அதிக அளவில் பணம் கிடைத்தது. திருட்டுத் தொழிலில் கிடைத்தால் பணத்தின் மூலம் கார் ஒன்றை வாங்கினார்.

    காரை எடுத்துச் சென்று அனந்தபூர் மாவட்டத்தில் 14 வீடுகளிலும், கர்நாடக மாநிலம், பாகே பள்ளிக்கு சென்ற ஷேக் காஜா பீரா 4 வீடுகளிலும், கோலாறில் 5 வீடுகளிலும் கொள்ளை அடித்தார். மொத்தம் 27 வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் போலீசார் ஷேக் காஜா பீராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கடந்த மார்ச் மாதம் ஷேக் காஜா பீரா ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

    பின்னர் தர்மாவரத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களான மகேஷ், ஜமீர் ஆகியோரை தன்னுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கொள்ளை ஈடுபட்டார். பகல் நேரங்களில் மகேஷ், ஜபீர் ஆகியோர் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வருவார்கள். இரவு நேரத்தில் ஜபீர் காரில் சென்று குறிப்பிட்ட வீட்டின் அருகில் நிறுத்துவார்.

    மகேஷும் ஜபீரும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள். ஷேக் காஜா பீரா மட்டும் வீட்டுக்குள் சென்று கொள்ளையடித்து வந்தனர்.

    போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கொள்ளை கும்பல் காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இந்த நிலையில் அனந்தபூர் சி.சி.எஸ் சாலையில் காரில் சென்ற ஷேக் காஜா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.

    விசாரணை நடத்தியதில் மொத்தம் ஆந்திரா தெலுங்கானாவில் 41 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 310 கிராம் தங்க நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×