search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடைசி கட்ட தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த லாலு பிரசாத் யாதவ் - ஹர்பஜன் சிங்
    X

    கடைசி கட்ட தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த லாலு பிரசாத் யாதவ் - ஹர்பஜன் சிங்

    • காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
    • முன்னாள் கிரிக்கெட் வீரருமான அர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

    இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் 7 ஆம் கட்டமும் கடைசி கட்டமுமான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று மாலை மாலை 6 மணி வரை வாக்குப்பதிவானது நடைபெறும்.

    இன்றைய தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களும் , சண்டிகார் யூனியன் பிரதேசமும் அடக்கம். இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தநாத், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் காலையிலேயே வந்து வாக்களித்த நிலையில் பிகார் முன்னாள் முதலாவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மனைவி ராபிரி தேவி மகள் ரோகினி ஆச்சார்யா ஆகியோருடன் பிகார் தலைநகர் பாட்டனாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    ஆர்ஜேடி எம்.பியாக உள்ள ரோகினி ஆச்சார்யா வாக்களித்தபின் பேசுகையில், மணிப்பூரில் உள்ள தனது சகோதரிகளுக்காக வாக்களித்ததாக தெரிவித்தார். பிகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பாட்டனா ராஜ் பவனில் தனது வாக்கினை செலுத்தினார்.

    மேலும் ஆம்ஆத்மி எம்.பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் தயவு செய்து வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    இந்திய சினிமாவின் மூத்த நடிகரும் பாஜக தலைவருமான மிதுன் சக்கரவர்த்தி, கல்கத்தாவில் இன்று வாக்களித்தார். அதன்பின் செய்திலயாளர்களிடம் அவர் பேசுகையில், வரிசையில் 40 நிமிடம் காத்திருந்து எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். ஒரு இந்திய குடிமகனாக அது எனது தலையாய கடமை என்று தெரிவித்தார்.

    Next Story
    ×