என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இதுவரை கோவில், மத நிகழ்ச்சிகளில் நடைபெற்ற கூட்ட நெரிசல் ஒரு பார்வை...
- 2005 ஜனவரி 25-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
- 2008 செப்டம்பர் 30-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் 162 பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று கோவில் மற்றும் மத நிகழ்ச்சிகளின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்த ஒரு அலசல் பின்வருமாறு:-
1. 2023 மார்ச் 31: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கோவிலில் உள்ள கிணற்றில் ராம நவமியை முன்னிட்டு புனித நீராடி சென்றபோது கிணற்றின் ஒரு பகுதி இடிந்து சுமார் 36 பேர் உயிரிழந்தனர்.
2. 2022 ஜனவரி 2: ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவிலில் ஏற்பட்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
3. 2015 ஜூலை 14: ஆந்திர பிரதேச மாநிலத்தில் புஷ்கரம் விழாவை முன்னிட்டு கோதாவரி ஆற்றங்கரையோரம் கூடியபோது 25 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
4. 2014 அக்டோபர் 3: பீகார் மாநிலத்தில் தசரா விழா முடிவடைந்து சில துளிகளில் பாட்னா காந்தி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.
5. 2013 அக்டோபர் 13: மத்திய பிரதேச மாநிலம் ரத்தன்கார்க் கோவில் அருகே நவராத்திரி விழாவின்போது, பக்தர்கள் கடந்து செல்லும் பாலம் இடிந்து விழுந்ததாக வதந்தி கிளம்பியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 115 பேர் உயிரிழந்தனர்.
6. 2012 நவம்பர் 19: பாட்னா கங்கா ஆற்றின் கரையோரம் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 20 பேர் உயிரிழந்தனர்.
7. 2011 நவம்பர் 8: ஹரித்வாரில் கங்கை ஆற்றின் கரையோரம் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 20 பேர் உயிரிழந்தனர்.
8. 2011 ஜனவரி 14: ஜீப் விபத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 104 ஐயப்பன் கோவில் பக்தர்கள் உயிரிழந்தனர்.
9. 2010 மார்ச் 4: உத்தர பிரதேச மாநிலம் ராம் ஜாங்கி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 63 பேர் உயிரிழந்தனர்.
10. 2008 செப்டம்பர் 30: இமாச்சல பிரதேசத்தில் நைனை தேவி கோவிலில் பாறை சரிந்து விழுவதாக வதந்தி கிளம்பியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 162 பேர் உயிரிழந்தனர்.
11. 2005 ஜனவரி 25: மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள மந்தர்தேவி கோவில் யாத்திரையின்போது 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
12. மகாராஷ்டிரா மாநிலம் கும்பமேளா புனித நீராடல் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 39 பேர் உயிரிழந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்