என் மலர்
இந்தியா
X
உடல்நலம் பாதிப்பு- எல்.கே.அத்வானி ஆஸ்பத்திரியில் அனுமதி
ByMaalaimalar14 Dec 2024 1:12 PM IST
- எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை,.
புதுடெல்லி:
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமருமான எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
97 வயதான அத்வானி 2 நாட்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த மாதம் தனது 97வது பிறந்தநாளைக் கொண்டாடிய அத்வானி, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்தார்.
ஜூலை முதல் அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது நான்காவது முறையாகும்.
Next Story
×
X