என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கர்நாடகாவில் இன்று 51 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை
- சோதனையால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரிகள் வீடுகள், மற்றும் அவர்களது அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள், பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று காலை முதல் மீண்டும் லோக் ஆயுக்தா போலீசார் கர்நாடகாவில் 51 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது.
பெங்களூரு, பெங்களூரு ஊரகம், சிமோகா, யாதகிரி, தும்கூர், ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையை இன்று அதிகாலை முதல் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
சோதனை நடந்து வரும் அதிகாரிகள் பட்டியல் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று லோக் ஆயுக்தா போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.