என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதல்வர்
Byமாலை மலர்7 Nov 2023 9:07 AM IST
- 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
- பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.
மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இன்று காலை ஐசால் வடக்கு-II தொகுதிக்குட்பட்ட 19-ஐசால் வெங்லாய்-I ஒய்.எம்.எம். ஹாலில் அமைக்கப்பட்டிருந்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.
அப்போது, வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகள் கோளாறை விரைவாக சரி செய்து விடுவோம். இதனால் சற்று காத்திருங்கள் என முதல்வரிடம் கூறினர். இதனால் முதல்வர் ஜோரம்தங்கா காத்திருந்தார்.
இருந்தபோதிலும் அதிகாரிகளால் உடனடியாக கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் முதல்வர் ஜோரம்தங்கா வாக்குச்சாவடியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் வந்து வாக்களிக்க இருப்பதாக தெரிவித்தார்.
Next Story
×