search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரிப்பேருக்கு ரூ.90,000.. ஓலா ஷோரூம் வாசலில்  இ-ஸ்கூட்டரை சுத்தியலால் நொறுக்கித் தள்ளிய நபர் - வீடியோ
    X

    ரிப்பேருக்கு ரூ.90,000.. ஓலா ஷோரூம் வாசலில் இ-ஸ்கூட்டரை சுத்தியலால் நொறுக்கித் தள்ளிய நபர் - வீடியோ

    • ஓலா ஷோரூமில் இருந்து கடந்த மாதம் புத்தம்புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இறக்கி உள்ளார்.
    • குட்டி யானையில் ஸ்கூட்டரை தூக்கிப்போட்டு நேராக ஓலா ஷோரூமுக்கு வண்டியை விட்டுள்ளார்.

    எலக்ட்ரிக் வாகனங்களை அரசு ஊக்குவித்தாலும் அவற்றை பராமரிப்பது பழுதுபார்ப்பதில் உள்ள சிக்கல் வாடிக்கையாளர்களைப் பின்வாங்கச் செய்து வருகிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஓலா விளங்கி வருகிறது.

    அந்த வகையில் ஒரு வாடிக்கையாளர் ஓலா ஷோரூமில் இருந்து கடந்த மாதம் புத்தம்புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இறக்கி உள்ளார். ஆனால் வாங்கிய ஒரு மாதத்திலேயே அதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அதை பழுதுபார்க்க ஓலா நிறுவனம் ரூ.90,000 சார்ஜ் கேட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் குட்டி யானையில் ஸ்கூட்டரை தூக்கிப்போட்டு நேராக ஓலா ஷோரூமுக்கு வண்டியை விட்டுள்ளார்.

    ஷோரூம் வாசாலில் தடாலடியாக அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குட்டி யானையில் இருந்து இறக்கிய அவர் கையோடு கொண்டு வந்த சுத்தியலால் ஆத்திரம் தீர அதை அடித்து துவம்சம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ரிப்பேர் செய்ய ரூ.90,000 ஓலா கேட்டதையும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதம், Ola Electric நிறுவனம் தங்களுக்கு வந்த 10,644 புகார்களில் 99.1 சதவீதம் தீர்க்கப்பட்டதாக்கத் தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் (NCH) கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்கூறிய சம்பவம் எங்கு எப்போது நடந்து என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

    Next Story
    ×