என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கர்நாடகாவில் பட்ஜெட் செசன்போது ஒய்யாரமாக எம்.எல்.ஏ. இருக்கையில் சென்று அமர்ந்த முதியவர்
- கர்நாடகா சட்டசபையில் சித்தராமையான நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டார்
- பலத்த பாதுகாப்பை மீறி ஒருவர் எம்.எல்.ஏ. இருக்கையில் அமர்ந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகா மாநில சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 70 வயது முதியவர் ஒய்யாரமாக சென்று, நேராக எம்.எம்.ஏ. இருக்கையில் சென்று அமர்ந்துள்ளார்.
அவர் அமர்ந்தது மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ. கரியம்மாவுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையாகும். அருகில் இருந்த மற்றொரு மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ., இந்த முகத்தை பார்த்த மாதிரி இல்லையே? என சந்தேகப்பட்டு சட்டசபை செயலரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டு சட்டசபையில் இருந்து அந்த முதியவர் வெளியேற்றப்பட்டார். சபாநாயகரிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் விசாரித்தபோது, அவர் பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்ததாகவும், எம்.எல்.ஏ. இல்லை எனவும் தெரியவந்தது.
எம்.எல்.ஏ.-விற்கான எந்த ஆதாரங்களும் இல்லாமல் பாதுகாப்பை மீறி சட்டசபைக்குள் நுழைந்து எம்.எல்.ஏ. இருக்கையில் ஒருவர் சென்று அமர்ந்தது, பாதுகாப்பு குறித்து விமர்சனம் எழுப்பப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு புதிதாக ஆட்சியமைத்தபின் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டம் இதுவாகும். சித்தராமையா 14-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.