search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வீட்டில் இருந்தபடியே ஜனநாயகக் கடமை ஆற்றிய மன்மோகன் சிங், எல்.கே. அத்வானி
    X

    வீட்டில் இருந்தபடியே ஜனநாயகக் கடமை ஆற்றிய மன்மோகன் சிங், எல்.கே. அத்வானி

    • நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
    • இந்நிலையில் டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை டெல்லி தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது.

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் மே 20 திங்கட்கிழமை அன்று உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் என அதிக வாக்காளர்கள் உள்ள மாநிலங்களில் உள்ள தொகுதிகள் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவில் பங்கேற்க உள்ளன. அதைத்தொடர்ந்து மே 25 ஆம் தேதி நடக்கும் 6 ஆம் கட்ட வாக்குபதிவு நாளன்று டெல்லிக்கு ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்து முடியும்.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை டெல்லி தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது. நேற்று இந்த வசதி மூலம் மொத்தம் 1409 பேர் வாக்களித்த நிலையில் இன்று வடக்கு டெல்லி உட்பட பல்வேறு தொகுதிகளில் மொத்தம் 2956 பேர் வாக்களித்தனர்.

    அதன்படி டெல்லியில் வசித்து வரும் பல்வேறு காட்சிகளைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் இன்று (மே 18) வாக்களித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமரும் மன்மோகன் சிங் நேற்று தனது வீட்டில் இருந்தபடியே தனதுஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

    முன்னாள் உள்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் முகமத் ஹமீத் அன்சாரி ஆகியோரும் நேற்றைய தினம் வாக்களித்தாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பாஜகவை மூத்த தலைவர் எல்.கே அத்வானி இன்று தனது இல்லத்தில் இருந்தபடியே வாக்களித்தார்.

    Next Story
    ×