search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகத்தில் வீடு, வீடாக சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்: மந்திரி சுதாகர்
    X

    கர்நாடகத்தில் வீடு, வீடாக சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்: மந்திரி சுதாகர்

    • ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் தடுப்பூசி மேளா நடத்தப்படும்.
    • கர்நாடகத்தில் 8 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன.

    பெங்களூரு:

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இந்த பணி இன்று(நேற்று) தொடங்கி வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 75 நாட்கள் நடக்கிறது. 2-வது டோஸ் போட்டு 6 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள தகுதியானவர்கள். இந்த 75 நாட்களில் 4.34 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.

    கர்நாடகத்தில் 8 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. மாநிலத்தில் தற்போது 8.84 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும் 31.55 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாவட்ட அளவில் தடுப்பூசி செலுத்த நுண்ணிய திட்டத்தை வகுத்துள்ளோம். அலுவலகங்கள் மற்றும் வீடு, வீடாக சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

    மென்பொருள் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்துவோம். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் தடுப்பூசி மேளா நடத்தப்படும். தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் அரசுடன் பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும். அரசின் தடுப்பூசி மையங்களில் தகுதியானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை இலவமாக போட்டு கொள்ளலாம்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    Next Story
    ×