search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மிசோரமில் கல் குவாரி இடிந்து விழுந்து 10 பேர் பலி.. அடியில் பலர் சிக்கியதால் பரபரப்பு
    X

    மிசோரமில் கல் குவாரி இடிந்து விழுந்து 10 பேர் பலி.. அடியில் பலர் சிக்கியதால் பரபரப்பு

    • மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
    • தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது

    வங்கக் கடலில் உருவாகி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேச எல்லையில் நேற்று முன் தினம் (மே 26) கரையைக் கடந்த ரீமால் புயலால் தெலங்கானா தொடங்கி வட கிழக்கு மாநிலங்கள் வரை பலத்த சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.

    இந்நிலையில் அங்குள்ள கல் குவாரி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    புயலின் தாக்கத்தால் சாலையோர மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து மின்சார வயர்கள் அறுந்து மழை நீரில் விழுந்து பொதுமக்களுக்கு அபாயகரமாக மாறியுள்ளது. இந்த புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





    Next Story
    ×