search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா கூட்டணியின் புயல் வீசுகிறது: ஜூன் 4-க்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார்- ராகுல் காந்தி
    X

    'இந்தியா கூட்டணியின் புயல் வீசுகிறது': ஜூன் 4-க்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார்- ராகுல் காந்தி

    • 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
    • மஹாராஷ்டிராவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் முதல் 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    இதனையடுத்து 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைந்தது.

    இந்நிலையில், மஹாராஷ்டிராவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அது தொடர்பான வீடியோவை பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, "மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஹரியானா, பீகார் என நாடு முழுவதும் இந்தியா கூட்டணியின் புயல் வீசுகிறது. மீண்டும் சொல்கிறேன் ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக இருக்க மாட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×