என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி- கணவர் கண் முன்னே மனைவி, குழந்தை உடல் கருகி பலி சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி- கணவர் கண் முன்னே மனைவி, குழந்தை உடல் கருகி பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/11/19/1983682-dead.webp)
X
சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி- கணவர் கண் முன்னே மனைவி, குழந்தை உடல் கருகி பலி
By
மாலை மலர்19 Nov 2023 11:09 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெங்களூரு வந்து சாலையை கடக்க முயன்றபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
- கணவர் கண் முன்பே மனைவியும், குழந்தையும் மின்சாரம் தாக்கி பலி.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த தாய் மற்றும் 9 மாத குழந்தை தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பெண், சென்னையைச் சேர்ந்த சவுந்தர்யா (23) என தெரியவந்துள்ளது. மின்வாரிய அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை பேருந்து மூலம் பெங்களூரு வந்து சாலையை கடக்க முயன்றபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
கணவர் கண் முன்பே மனைவியும், குழந்தையும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
X