search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் பிரதமர் மோடி.. ராஜஸ்தான் முதல்வர் ஓபன் டாக் -  வைரலாகும் வீடியோ
    X

    எனக்கு மிகவும் பிடித்த 'நடிகர்' பிரதமர் மோடி.. ராஜஸ்தான் முதல்வர் ஓபன் டாக் - வைரலாகும் வீடியோ

    • இந்த வீடியோவை பகிர்ந்து கடைசியில் பாஜக உண்மையை ஒப்புக்கொண்டது என விமர்சித்துள்ளது.
    • அவர் கேமரா கலைத்திறன், டெலிப்ராம்ப்டர்கள், உடைகள் மற்றும் மலர்ச்சியூட்டும் பேச்சுகளில் நிபுணர்.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த IIFA திரைப்பட விருது விழாவில் அம்மாநில பாஜக முதல்வர் பஜன்லால் சர்மா கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அவரிடம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேள்வி கேட்டனர். இதைக் கேட்டதும் முதல்வர் சிரித்துக் கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அவர் சொன்னார்.

    இதைப் கேட்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் இந்த வீடியோவை பகிர்ந்து, ஒரு வழியாக பாஜக உண்மையை ஒப்புக்கொண்டது என விமர்சித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோட்டாசாரா, மோடி ஒரு தலைவர் அல்ல, ஒரு நடிகர் என்று நாங்கள் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறோம்.

    தாமதமாக இருந்தாலும், பாஜக அரசாங்கத்தின் முதலமைச்சர்கள் கூட மோடி ஒரு நடிகர், மக்கள் தலைவர் அல்ல என்று கூறத் தொடங்கியுள்ளனர். அவர் கேமரா கலைத்திறன், டெலிப்ராம்ப்டர்கள், உடைகள் மற்றும் மலர்ச்சியூட்டும் பேச்சுகளில் நிபுணர் என்று விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேராவும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    Next Story
    ×