என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நீட் தேர்வு முறைகேடு: ஆந்திரா- தெலுங்கானாவில் வலுக்கும் போராட்டம்.. உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
- நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- வட மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தைத் தழுவி நடத்தப்படும் நீட் தேர்வுகள் மாநிலப் பாடத்திட்டத்தைத் தழுவி பள்ளிப்படிப்பை மேற்கொள்ளும் பெரும்பான்மையான மாணவர்களை மருத்துவப்படிப்புகளில் சேர விடாமல் தடுத்து அநீதி இழைக்கிறது என்ற எதிர்ப்புக்குரல் எழுந்தது.
கோச்சிங் சென்டரிகளின் வியாபாரத்தை விருத்தி செய்வதற்காகவே நீட் திணிக்கப்பட்டது என்ற விமர்சனத்தை கல்வியாளர்கள் முனவிகின்றனர். நீட் தேர்வு அச்சத்திலும் தோல்வியிலும் ஏற்படும் தற்கொலைகள் இந்தியா முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆராம்பம் முதலே நீட் தேர்வை தமிழகம் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல முறைகேடுகள் எழுந்துள்ளது என வட மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
கடந்த மாதம் 5 ஆம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.
நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த வருட நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை மறு தேர்வு நடத்தப்படாது என்று அறிவித்தது.
இதனைதொடர்ந்து தீவிரமடைந்துள்ள நீட் எதிரிப்பு போராட்டத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் வீதியில் இறங்கி நியாயம் கேட்கத் தொடங்கியுள்ளனர். நீட் தேர்வை எதிரித்து சட்டப் போராட்டங்களையும் மாநில அரசுகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.
தமிழக அரசு நிறைவேற்றிய நீட் ரத்து மசோதா குடியரசுத் தலைவரின் மேஜையில் ஒப்புதலுக்கு காத்துக்கிடக்கிறது. இதற்கிடையில் இந்த வருடம் நடபதப்பட்ட நீட் தேர்வின் முடிவுகளை திரும்பப்பெற்று மறுதேர்வு நடத்த கோரி தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஆனால் முறையான விளக்கங்கள் ஏதும் தரப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக மகாராஷ்டிர அரசு நீட் தேர்வு தங்களது மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாவும் இந்த வருட தேர்வை செல்லாது என அறிவிக்க நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்