என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நீட் நுழைவு தேர்வு.. '0' மார்க் எடுத்தாலும் சீட் உறுதி.. நீங்க நம்பலைனாலும், அதான் நெசம்..!
- மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டது.
- நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.-வினர் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இது குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டது," என்று குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் "பூஜ்ஜியம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அறிந்து கொள்ளவும்."
"நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல? நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை," என்று தெரிவித்து இருக்கிறார்.
தெலுங்கானா கவர்னர் கூறியிருப்பது போன்று பெர்சண்டேஜ் மற்றும் பெர்சண்டைல் இடையே உண்மையில் பெரிய வித்தியாசம் உண்டு. பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள். இந்த பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. 50 தான்.
பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பது. உதாரணமாக, ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள்- 89,90,90,91,92, 96,98,98,99. இதில் 50வது பெர்சண்டைல் 92. அதாவது 50% மாணவர்கள் 92க்கு மேல் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 92க்கு கீழ் பெற்றுள்ளனர்.
இதே தேர்வு சற்று கடினமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்போது மதிப்பெண்கள்- 18,22, 34, 35, 36, 40,41,41,42 என்று இருந்தால், 50% மாணவர்கள் 36க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 36க்கு கீழ் பெற்றுள்ளனர். நீட் நுழைவு தேர்விலும் நெகடிவ் மதிப்பெண் உண்டு.
ஜீரோ பெர்சண்டைல் என்பது ஜீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஜீரோ பெர்சண்டைல். எனவே முட்டை மதிப்பெண்ணுக்கும் கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் உறுதி.
அந்த வகையில் மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின் படி, மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்பதே பொருள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்