என் மலர்
இந்தியா
பாரம்பரிய பீகார் சேலையில் பட்ஜெட் வாசித்த நிர்மலா சீதாராமன் - நெட்டிசன்கள் கிண்டல்
- பட்ஜெட்டில் பீகாருக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
- நிர்மலா சீதாராமன் பீகாரை சேர்ந்த மதுபானி வகை சேலையை அணிந்து வந்திருந்தார்.
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பீகாரில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இது மத்திய அரசின் பட்ஜெட்டா? இல்லை பீகார் பட்ஜெட்டா? என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகாரை சேர்ந்த மதுபானி வகை சேலையை அணிந்து வந்திருந்தார்.
இதனையடுத்து, பீகார் மாநில பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தான் பீகார் மாநில சேலையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வந்துள்ளாரோ என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.