search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இலவச பேருந்து திட்டத்தில் அந்தர் பல்டி? கர்நாடக முதல்வர் அதிரடி விளக்கம்!
    X

    இலவச பேருந்து திட்டத்தில் அந்தர் பல்டி? கர்நாடக முதல்வர் அதிரடி விளக்கம்!

    • அரசுக்கு இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
    • எனக்குத் தெரியாது, நான் அங்கு இல்லை.

    கர்நாடகாவில் வசிக்கும் அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயணத்தை வழங்கி வரும் "சக்தி திட்டத்தை" மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

    சக்தி திட்டத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா, "அரசுக்கு அப்படி எந்த முன்மொழிவும் இல்லை. அவர் (சிவகுமார்) சில பெண்கள் சொல்வதை மட்டுமே கூறினார். எனக்குத் தெரியாது, நான் அங்கு இல்லை, நான் பேசுகிறேன்..," என்று பதில் அளித்தார்.

    பல பெண்கள் பயணத்திற்கு பணம் செலுத்த தயாராக இருப்பதாகவும், அவர்களுக்கு இலவச பயணம் வேண்டாம் என்றும் எக்ஸ் தளத்தில் டேக் செய்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியதைக் குறிப்பிட்ட சிவக்குமார், ஒரு நிகழ்வில் உரையாற்றினார்.

    அப்போது "பார்ப்போம், நாம் அனைவரும் உட்கார்ந்து விவாதிப்போம். அவர்கள் ஒரு பிரிவினர் (பெண்கள்) 5-10 சதவிகிதம் இருக்கலாம், சிலர் பணம் கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். போக்குவரத்து துறை அமைச்சரும் நானும் என்ன செய்வது என்று விவாதிப்போம்," என்று தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு செயல்படுத்திய ஐந்து உத்தரவாத திட்டங்களில் சக்தி திட்டமும் ஒன்று. இது ஜூன் 11, 2023 அன்று அரசாங்கம் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் தொடங்கப்பட்டது. அக்டோபர் 18, 2024 நிலவரப்படி, பெண்கள் 311.07 கோடி இலவச பயணங்களுக்கு சக்தி திட்டத்தில் மாநிலம் ரூ.7,507.35 கோடி செலவிட்டது.

    Next Story
    ×