search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    vinesh Phogat and Rajpal Rathi
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வினேஷ் போகத் விஷயத்தில் சதி, பிரதமர் தலையிட வேண்டும்.. மாமனார் கோரிக்கை

    • வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் பெற தகுதியானவள்.
    • வினேஷ் போகத்-இடம் நாங்கள் இன்னும் பேசவில்லை.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

    எனினும், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார். இதையடுத்து சர்வதேச மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    வினேஷ் போகத் விவகாரம் குறித்து பேசிய அவரின் மாமனார் ராஜ்பால் ரதி, "அவள் தனது 100 சதவீதத்தை கொடுத்துவிட்டாள். இந்த விஷயத்தில் ஏதேனும் சதி இருக்கலாம். ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க பிரமதரை கேட்டுக் கொள்கிறோம். இது நம் உரிமை, அவள் நம் தேசத்தின் மகள்."

    "வெள்ளிப் பதக்கம் அவளின் உரிமை. நாங்கள் இன்னும் அவளிடம் பேசவில்லை. அவள் இங்கு திரும்பி வந்ததும், ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு நாட்டிற்கு தங்கம் வெல்ல தயாராகுமாறு பேசுவோம்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×