search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விவாதத்தை ஏற்படுத்திய பெண்ணின் டேட்டிங் வீடியோ
    X

    விவாதத்தை ஏற்படுத்திய பெண்ணின் டேட்டிங் வீடியோ

    • காதல் என்பது ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன சைகைகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.
    • பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    டேட்டிங் கலாசாரம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. இளம் ஜோடிகள் தங்கள் இணையை தேர்ந்தெடுக்க இணையத்தில் சில டேட்டிங் செயலிகளும் வந்துவிட்டன. இந்நிலையில் இந்திய ஆண்களுடன் டேட்டிங் செய்யாததற்கு மூன்று காரணங்கள் உள்ளது என ஒரு பெண் பட்டியலிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேத்னா சக்கரவர்த்தி என்ற அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான காரணங்களை விளக்கி உள்ளார். அதில், இந்திய ஆண்கள் கடினமான உரையாடல்களை கற்றுக்கொள்ளவில்லை. அவர்களால் ஒரு விஷயத்தை வாதிட முடியாதபோது அவர்கள் அமைதியாகி விடுகின்றனர்.

    மேலும் அவர்கள் பெண்ணை ஆக்ரோஷமானவர் என்று முத்திரை குத்துகின்றனர். இந்திய ஆண்களுக்கு காதல் புரியவில்லை. காதல் என்பது ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன சைகைகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும், இது இந்திய ஆண்களின் பிரச்சினை அல்ல. இது பாலின பிரச்சினை என்று பதிவிட்டுள்ளனர்.

    Next Story
    ×