search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எங்களுடைய உத்தரவாதங்கள் நாட்டை சீர்திருத்துகின்றன: பிரதமர் மோடி குற்றச்சாட்டிற்கு டி.கே. சிவக்குமார் பதில்
    X

    எங்களுடைய உத்தரவாதங்கள் நாட்டை சீர்திருத்துகின்றன: பிரதமர் மோடி குற்றச்சாட்டிற்கு டி.கே. சிவக்குமார் பதில்

    • எங்களுடைய உத்தரவாதங்கள் நாட்டை சீர்திருத்துகின்றன.
    • ஒட்டுமொத்த நாடும் எங்களுடைய மாடலை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு உத்தரவாதங்களை அளித்தது. அதில் ஒன்று பெண்கள் இலவச பேருந்து பயணம் (சக்தி திட்டம்) ஆகும். ஆட்சியை பிடித்ததும் இந்த திட்டத்தை அமல்படுத்தியது. தற்போது இந்த திட்டம் அமலில் இருந்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், டிக்கெட் கொடுத்து பயணம் செய்ய விரும்புவதாக பல பெண்களிடம் இருந்து எங்களுக்கு இ-மெயில் மூலம் கோரிக்கை வந்தது. இதனால் இந்த திட்டம் குறித்து பரிசீலனை செய்வோம் எனக் கூறியிருந்தார்.

    இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒரு உத்தரவாதத்தை அறிவிக்கும்போது அதற்கு போதுமான நிதி உள்ளதா? என ஆராய்ந்து அறிவிக்க வேண்டும். அறிவித்தபின் இவ்வாறு பேசக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.

    இதை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்திருந்தார். பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுவிட்டது, பின்னர் மக்களை வஞ்சிக்கின்றனர் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு டி.கே. சிவக்குமார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறுகையில் "எங்களுடைய உத்தரவாதங்கள் நாட்டை சீர்திருத்துகின்றன. ஒட்டுமொத்த நாடும் எங்களுடைய மாடலை பார்த்துக் கொண்டிருக்கின்றன. எங்களுடைய மாடலை பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் காப்பி அடித்து கொண்டிருக்கின்றன. எங்களுடைய உத்தரவாதங்கள் மக்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருந்து வருகின்றன. பா.ஜ.க. இதை அரசிலாக பார்க்கிறது. நாங்கள் வளர்ச்சியாக பார்க்கிறோம்" என்றார்.

    Next Story
    ×