search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்- 1 மணி நிலவரப்படி 40 சதவீத வாக்குகள் பதிவு
    X

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்- 1 மணி நிலவரப்படி 40 சதவீத வாக்குகள் பதிவு

    • வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள்.
    • ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

    வாக்குப்பதிவின் முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். காலை 11 மணிக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×