search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராசிட்டமால் உள்ளிட்ட 53 மருந்துகள் தரநிலை சோதனையில் தோல்வி: அதிர்ச்சி தகவல்
    X

    பாராசிட்டமால் உள்ளிட்ட 53 மருந்துகள் தரநிலை சோதனையில் தோல்வி: அதிர்ச்சி தகவல்

    • நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
    • மருந்துகளின் பட்டியலில் தினசரி எடுக்கும் பல மருந்துகளும் அடங்கியுள்ளன.

    இன்றைய காலகட்டத்தில் தினசரி உணவு எடுத்துக்கொள்கிறோமோ இல்லையோ... ஆனால் மாத்திரை இல்லாமல் அன்றைய பொழுது செல்லாது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உடல்நல பிரச்சனைக்கு மருந்து உட்கொள்கிறோம்.

    அதே போல் சளி, காய்ச்சல், தலைவலி போன்று அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. தலைவலி வந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலோ மருத்துவரை அணுகாமல் பாராசிட்டமால் வாங்கி உட்கொள்ளும் பழக்கமும் நம்மிடையே நிலவுகிறது.

    இப்படி நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் சர்க்கரை, உயர் இரத்த அழுத்த மாத்திரைகள் உட்பட 53-க்கும் அதிகமான மருந்துகள் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரின் தர சோதனையில் தோல்வியடைந்துள்ளன. இந்த மருந்துகளின் பட்டியலில் தினசரி எடுக்கும் பல மருந்துகளும் அடங்கியுள்ளன.

    அதன் விவரம்:-

    * வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள் ஷெல்கால்

    * வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சாப்ட்ஜெல்கள்

    * ஆன்டிஆசிட் பேன்-டி

    * பாராசிட்டமால் ஐபி 500மிகி

    * நீரிழிவு எதிர்ப்பு மருந்து க்ளிமிபிரைடு

    * உயர் இரத்த அழுத்த மருந்து டெல்மிசார்டன் மற்றும் பல அடங்கும்.

    பாராசிட்டமால் மாத்திரைகளும் தரமற்றவையாக இந்த சோதனையில் உறுதி செய்யப்பட்டு, மக்கள் இவற்றை எடுக்கக்கூடாதென மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

    Next Story
    ×