search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல்: கர்நாடகாவில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு
    X

    பாராளுமன்ற தேர்தல்: கர்நாடகாவில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு

    • நகர்புறங்களில் 21ஆயிரத்து 595 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 37ஆயிரத்து 239 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
    • வேட்புமனு தாக்கல் மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெங்களூரு வடக்கு தொகுதியில் அதிகபட்சமாக 31 லட்சத்து 74ஆயிரத்து 98 வாக்காளர்களும், உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 15லட்சத்து 72ஆயிரத்து 958 வாக்காளர்களும் உள்ளனர்.

    தேர்தலுக்காக 58ஆயிரத்து 834 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நகர்புறங்களில் 21ஆயிரத்து 595 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 37ஆயிரத்து 239 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் 3.51லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

    கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக உடுப்பி-சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடம், சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர், பெங்களூரு கிராமப்புறம், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மையம், சிக்கபல்லாபூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை ஏப்ரல் 5-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 8-ந் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் சிக்கோடி, பெல்காம், பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூர், பிதார், கொப்பளா, பெல்லாரி, பாருங்கள், தார்வாட், உத்தரகன்னடம், தாவனகரே, சிமோகா ஆகிய தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக மே 7-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 20-ந் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப்பெற ஏப்ரல் 22-ந் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×