என் மலர்
இந்தியா

போபால் முதலீட்டாளர்கள் மாநாடு: Late-ஆ வந்த மோடி.. அதற்கு சொன்ன காரணம் தான் 'ஹைலைட்'..!

- திட்டமிட்டதை விட சற்று கால தாமதம் ஆனது.
- தாமதமாக வந்ததற்கான காரணத்தை கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அம்மாநிலத்தின் போபாலில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இன்று காலை தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டதை விட சற்று கால தாமதம் ஆனது.
இதையடுத்து, மாநாட்டில் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி முதலில் தாமதமாக வந்ததற்கு தன்னை மன்னிக்குமாறு கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தை விளக்கி கூறினார்.
அப்போது பேசிய அவர், "இங்கு வந்ததும் மாநிலத்தில் தேர்வுகள் நடைபெற இருப்பதும், மாணவர்கள் அதில் பங்கேற்க செல்லும் நேரமும், நான் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வரும் நேரமும் ஒன்றாக இருந்தது. ஒரே நேரமாக இருப்பதால், நாம் வெளியே வந்தால், போக்குவரத்து மாற்றங்களால் மாணவரகள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படலாம்.
இதன் காரணமாக ஆளுநர் மாளிகையில் இருந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்படுவது என முடிவு செய்தேன். இதனால் தான் நான் இங்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. தாமதமானதால் ஏற்பட்ட இடையூறுக்கு மீண்டும் உங்கள் அனைவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.