search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலியல் துன்புறுத்தல் புகார்: பிளாக்மெயிலுக்காக கொடுக்கப்பட்டது என பிரஜ்வால் சகோதரர் போலீசில் புகார்
    X

    பாலியல் துன்புறுத்தல் புகார்: பிளாக்மெயிலுக்காக கொடுக்கப்பட்டது என பிரஜ்வால் சகோதரர் போலீசில் புகார்

    • சுரஜ் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக நபர் ஒருவர் புகார்.
    • போலி புகார் மூலம் பிளாக்மெயில் செய்வதாக சுராஜ் ரேவண்ணா போலீசில் புகார்.

    கர்நாடக மாநில முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ஆபாச வீடியோ வெளியானது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவரது சகோதரரான சுரேஜ் ரேவண்ணா, தன்னை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலியாக புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை மிரட்டியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுராஜ் ரேவண்ணாவை மிரட்டுவதாக இருவர் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    சுராஜ் ரேவண்ணா மற்றும் அவருக்கு நன்கு அறிந்தவருமான சிவகுமார் ஆகியோர் சேத்தன் மற்றும் அவர் மைத்துனர் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளனர். ரேவண்ணாவை அவதூறாக பேசாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்று கேட்டதாக அந்த புகாரில் குற்றம்சாட்டியுள்ளனர்.

    சேத்தன் சிவகுமாருடன் நட்பாக இருந்துள்ளார். அவருக்கு பாதுகாப்பான வேலைக்கு உதவி செய்யுமாறு சிவகுமாரிடம் கேட்டுள்ளார். சிவகுமாரும் சரி எனச் சொல்லி, சேத்தனை சுராஜ் ரேவண்ணாவிடம் மக்களவை தேர்தலின்போது அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    ஜூன் 17-ந்தேதி சேத்தன் சிவக்குமாருக்கு போன் செய்து ரேவண்ணாவின் பண்ணை வீட்டிற்கு வேலை கேட்டு சென்றதாகவும், வேலை மறுக்கப்பட்டதாகவும் தெரிவிதுள்ளார். பின்னர் சிவக்குமாருக்கு போன் செய்து ஐந்து கோடி ரூபாய் தரவில்லை என்றால் ரேவண்ணா மற்றும் ரேவண்ணா குடும்பம் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார். அதன்பின் தனது மைத்துனருடன் சேர்ந்து 3 கோடி ரூபாய், 2.5 கோடி ரூபாய் தருமாறு தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

    ஜூன் 19-ந்தேதி சேத்தன் மீண்டும் போன் செய்து, ரேவண்ணா குடும்பம் மீது அவதூறு பரப்புவேன் என மிரட்டியுள்ளார். அதன்பின் சுராஜ் ரேவண்ணா, சிவக்குமார் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். அதேவேளையில் பண்ணை வீட்டில் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என சேத்தன் தெரிவித்துள்ளார்.

    "ஹசன் மாவட்டத்தில் உள்ள கன்னிகாடா பண்ணை வீட்டில் ஜூன் 16-ந்தேதி சுராஜ் ரேவண்ணா என்னுடைய தோள்பட்டையில் அவருடைய கையை போட்டார். அவருடைய கை எங்கே எங்கேயோ சென்றது. அதன்பின் என்ன நடக்கக் கூடாதோ, அது எனக்கு நடந்தது. ரேவண்ணாவின் உதவியாளர் இந்த விசயத்தை மூடி மறைக்க தனக்கு வேலை தருவதாகவும் தெரிவித்தார். மேலும் பிளாக்மெயில் செய்ய முயன்றார்.

    ஹோலேனராசிபுர டவுண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். ஆனால், எனக்கு புகார் மறுக்கப்பட்டது. அதன்பின் பெங்களூருவில் உள்ள டிஜி அலுவலத்தில் புகார் அளித்தேன்" எனத தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில் "யார் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், சட்டத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது" என்றார்.

    Next Story
    ×