search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    21 பேரை தலை துண்டித்து கொலை செய்த சாமியார்: பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி சொத்து அபகரிப்பு
    X

    21 பேரை தலை துண்டித்து கொலை செய்த சாமியார்: பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி சொத்து அபகரிப்பு

    • ரியல் எஸ்டேட் அதிபர் சாமியார் சத்தியத்துடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தது சாமியாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கொலை செய்தவர்களை சாமியார் சத்தியம் புதைத்தாரா? அல்லது உடல்களை எரித்து விட்டாரா? என்பது தெரியவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சத்யம் (வயது 42). மந்திரவாதியான இவர் பில்லி சூனியம் நீக்குவதாக கூறி வந்தார்.

    மேலும் திடீர் அதிர்ஷ்டம் வேலை வாய்ப்பு திருமணத்தடை சொத்து கைவசப்படுத்துவது, வசியம் செய்வது, மந்திர பூஜையால் எந்த விஷயத்தையும் நடத்தி காட்டுவதாகவும் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளார்.

    இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் திடீரென மாயமானார். இது குறித்து அவருடைய மனைவி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரியல் எஸ்டேட் அதிபர் கடைசியாக சந்தித்த நபர்கள் குறித்து விசாரணையில் இறங்கினர்.

    அப்போது ரியல் எஸ்டேட் அதிபர் சாமியார் சத்தியத்துடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தது சாமியாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சாமியார் ரியல் எஸ்டேட் அதிபரை தலை துண்டித்து கொலை செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் சொத்து அபகரித்தது தெரியவந்தது. தொடர்ந்து சாமியாரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சாமியார் சத்தியம் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. சாமியார் சத்தியம் தன்னிடம் பில்லி, சூனியம் நீக்குவதற்காக பூஜை செய்ய வருபவர்கள் குறித்த பின்னணியை அறிந்து கொண்டுள்ளார்.

    அவர்களை தனியாக வரவழைத்து அதிக பணம் நகை வாங்கியுள்ளார். பின்னர் அவர்களை தலை துண்டித்து கொலை செய்துள்ளார்.

    ஐதராபாத்தில் வாலிபர் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார். வாலிபர் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை என சாமியாரை தட்டி கேட்டார். அப்போது வாலிபரை சாமியார் கொலை செய்துள்ளார்.

    சாமியார் இதுவரை 21 பேரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்டவர்களிடமிருந்து பணம் சொத்து உள்ளிட்டவற்றை சாமியார் அபகரித்துள்ளார்.

    கொலை செய்தவர்களை சாமியார் சத்தியம் புதைத்தாரா அல்லது உடல்களை எரித்து விட்டாரா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    21 பேர் தவிர மேலும் யாரையாவது சாமியார் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திரா, தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதே போல ஆந்திர மாநிலம் வனபர்த்தி மாவட்டம் நாகப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாமியாரிடம் தங்கள் குடும்ப பிரச்சினை தீர்க்க வேண்டும் எனக் கூறி வந்தனர். அவர் குடும்பத்தினர் 4 பேரையும் வரவழைத்து பில்லி சூனிய பூஜை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.அவர்களை தலை துண்டித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அவர்கள் உடல்களை என்ன செய்தார் என்பது தெரியவில்லை. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×