search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் கொடி அடையாளம்: சர்ச்சையில் தனியார் டி.வி.
    X

    இந்திய முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் கொடி அடையாளம்: சர்ச்சையில் தனியார் டி.வி.

    • 1950 முதல் 2015 வரையிலான மக்கள் தொகையில் இந்து மக்கள் தொகை 7.82 சதவீதம் குறைந்துள்ளது.
    • அதேவேளையில் முஸ்லிம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வில் தகவல்.

    பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் சிறுபான்மையினர் மக்கள் தொகை- நாடுகள் இடையேயான நிலை என்ற பெயரில் விரிவான ஆய்வை நடத்தியது.

    அந்த ஆய்வறிக்கையில் 1950 முதல் 2015 வரையிலான மக்கள் தொகையில் இந்து மக்கள் தொகை 7.82 சதவீதம் குறைந்துள்ளது. அதேவேளையில் முஸ்லிம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக பிரபலமான தனியார் தொலைக்காட்சியின் கன்னட மொழி சேனலில் விவாதம் நடைபெற்றது. அப்போது சதம் வீதத்தை இந்தியாவின் இந்துக்களை இந்திய கொடியிலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம்களை பாகிஸ்தான் கொடியிலும் காண்பித்திருந்தது.

    இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களை எப்படி பாகிஸ்தான் தேசியக் கொடியிலும் என காட்டலாம் என்று விமர்சனம் எழுந்தது. தற்போது இது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

    சர்ச்சை வெடித்துள்ள நிலையில் தொலைக்காட்சி நிறுவனம் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை நீக்கியுள்ளது.

    Next Story
    ×