search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீனியர்களின் ராகிங் கொடுமை.. மயங்கி  விழுந்து மருத்துவ மாணவர் உயிரிழப்பு
    X

    சீனியர்களின் ராகிங் கொடுமை.. மயங்கி விழுந்து மருத்துவ மாணவர் உயிரிழப்பு

    • அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்தனர்
    • மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    குஜராத் மாநிலத்தில் மருத்துவக்கல்லூரியில் சீனியர்களின் ராகிங் கொடுமையால் 18 வயது மாணவன் பரிதமபாக உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள தர்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து வந்துள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள் சிலர் முதலாமாண்டு மாணவர்களை அழைத்து, அவர்கள் அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது 18 வயதான அணில் மெதானியா என்ற மாணவர், திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை சக மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடதுக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவனின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியறுதியள்ளனர்.

    Next Story
    ×