என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி - தெலுங்கானா முதல் மந்திரி மகள் தாக்கு
- தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
- அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவி வருகிறது.
ஐதராபாத்:
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக கவிதா கூறுகையில், ராகுல் காந்தி காட்டு சிங்கம் அல்ல; அவர் ஒரு காகிதப் புலி. ஏனென்றால், யார், எதை எழுதி கொடுத்தாலும், அதைத்தான் படித்துவிட்டுப் போவார். உள்ளூர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள மாட்டார். இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர் மரபுகள் அல்லது கலாசாரத்தை அவர் மதிக்கவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.