search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ujjain rape case - rahul gandhi
    X

    ம.பி.யில் நடுரோட்டில் பெண் பாலியல் பலாத்காரம் - ராகுல், பிரியங்கா கண்டனம்

    • பெண்களின் பாதுகாப்பிற்காக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
    • புனித பூமியான உஜ்ஜயினியில் இதுபோன்ற ஒரு சம்பவத்தால் மனிதநேயம் களங்கப்படுத்தப்பட்டுள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை சாலையில் வைத்து ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெற்ற இத்தகைய கொடூர சம்பவம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ராகுல்காந்தி அவரது எக்ஸ் பதிவில், "உஜ்ஜயினி மற்றும் சித்தார்த்நகரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மனிதகுலத்தின் மீது படிந்துள்ள கறையாகும்.

    பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றங்களும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான காவல்துறையின் அணுகுமுறையும் கவலையளிக்கிறது.

    பெண்களின் பாதுகாப்பிற்காக சமூகத்தின் தார்மீக மேம்பாட்டிற்காக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. சமூகம், அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக ஒவ்வொரு மட்டத்திலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    ஒரு சிறந்த குடிமகன் ஒரு சிறந்த அமைப்பை உருவாக்குகிறார், சிறந்த அமைப்பு ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    பிரியங்கா காந்தி அவரது பதிவில், "மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் பட்டப்பகலில் நடைபாதையில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. இன்று நம் சமூகம் அதிக நோக்கி செல்கிறது என்று முழு நாடும் திகைத்து நிற்கிறது? அந்த வழியாக சென்றவர்கள் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை காப்பாற்றுவதற்கு பதிலாக வீடியோ எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புனித பூமியான உஜ்ஜயினியில் இதுபோன்ற ஒரு சம்பவத்தால் மனிதநேயம் களங்கப்படுத்தப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×