என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆந்திராவில் 2 ஆண்டுகளில் செம்மரம் கடத்திய 228 தமிழர்கள் கைது
- கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதியை மையமாக கொண்டு செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.
- கடந்த 2 ஆண்டுகளில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 228 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷாசல காடுகளில் அதிக அளவில் செம்மரங்கள் வளர்கின்றன. இந்த செம்மரங்களை வெட்டி, அதன் கட்டைகளை சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர்.
இதைத் தடுக்க கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதியை மையமாக கொண்டு செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.
இந்த பிரிவு தொடங்கப்பட்டதிலிருந்து தினமும் ரோந்து பணியில் ஈடுபடுதல், மரம் வெட்ட வருபவர்களுக்கு வேறு வகையில் வாழ்வாதாரத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்துரையாடுதல், கடத்தல் குறித்த தகவல்களை அளிக்க வாட்ஸ்-அப் செயலி என பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 228 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 392 பேர், கர்நாடகத்தை சேர்ந்த 12 பேர் என மொத்தம் 641 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 4,171 செம்மரக்கட்டைகளும், கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 102 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.