search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அக்னி வீரர்களுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு.. ஒரே நாளில் 5 மாநில பாஜக  முதல்வர்கள் அறிவிப்பு
    X

    அக்னி வீரர்களுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு.. ஒரே நாளில் 5 மாநில பாஜக முதல்வர்கள் அறிவிப்பு

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள்.
    • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்.

    கார்கில் போரின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று [ஜூலை 26] கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மத்திய பாஜக அரசு கொண்டுவந்த ராணுவ ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பாஜக ஆளும் 5 மாநிலங்கள் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய 5 மாநில முதல்வர்கள் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்.

    இந்த திட்டம் இளைஞர்களை பயன்படுத்திவிட்டு அவர்களை தூக்கியெறியும் வகையில் உள்ளது என்றும், முறையாக பயிற்சி கிடைக்காத அக்னிவீரர்களை, ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தும் சிக்கலும் இதில் உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    சமீபத்தில் பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், அக்னிபாத் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக பாஜக ஆளும் 5 மாநில முதல்வர்களும் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

    அதன்படி மாநில அரசின் காவல்துறை மற்றும் மாநிலத்தின் ஆயுதக் காவல் படை [PAC] பணிகளில் ஓய்வுபெற்ற அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அரியானாவில் ஆளும் பாஜக அரசு, மாநிலத்தின் காவல்துறை மற்றும் சிறைத்துறை பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×