search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பணி ஓய்வு பெற்ற போலீஸ் மோப்ப நாய்க்கு மாலை அணிவித்து மரியாதை
    X

    பணி ஓய்வு பெற்ற நாய் ஜெனிக்கு போலீசார் போல் மாலை அணிவித்து மரியாதை செய்து அனுப்பி வைத்தனர்.

    பணி ஓய்வு பெற்ற போலீஸ் மோப்ப நாய்க்கு மாலை அணிவித்து மரியாதை

    • தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.
    • ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார்.

    திருச்சூர் கேரள போலீஸ் அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஜெனி கடந்த 2015-ம் ஆண்டு முதல் இடுக்கி மோப்பநாய் படையில் பணியாற்றியது.

    கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் துப்புதுலங்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் முக்கிய பங்கு வகித்தது. தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.

    அதன்படி பணி ஓய்வு பெற்ற நாய் ஜெனிக்கு போலீசார் போல் மாலை அணிவித்து மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். இடுக்கி மோப்பநாய் படை பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் ஜெனி மோப்பநாய் சீருடையில் வந்தது. அதனை இடுக்கி மாவட்ட எஸ்.பி. குரியகோஸ் மாலையிட்டு வரவேற்றார். அதன்பிறகு போலீஸ் நடைமுறைப்படி மரியாதை செலுத்தப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    வழக்கமாக பணி ஓய்வு பெறும் மோப்ப நாய்கள் திருச்சூர் போலீஸ் அகாடமி ஓய்வு முகாமிற்கு அனுப்பப்படும் ஆனால் ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று எஸ்.பி. அவரிடம் ஜெனியை ஒப்படைத்தார். பல ஆண்டுகளாக பழகிய சாபுவுடன் ஜெனி உற்சாகமாக சென்றது.

    Next Story
    ×