என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
19 வயதில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்கா
- இறுதிப்போட்டியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ், நடிகையுமான ஊர்வசி ரவுத்தாலா நடுவராக பங்கேற்றார்.
- முந்தைய வெற்றியாளர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்று ரியா கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் இறுதிப்போட்டி நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸும், நடிகையுமான ஊர்வசி ரவுத்தாலா நடுவராக பங்கேற்றார்.
இப்போட்டியில் 19 வயதே ஆன ரியா சிங்கா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு ஊர்வசி கிரீடத்தை சூட்டினார். இதனையடுத்து ரியா சிங்காவுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
இந்த பெரிய வெற்றிக்கு பிறகு, ரியாவால் தன் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. பிரகாசமான புன்னகையுடன் பேசிய ரியா, இன்று நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றேன். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இந்த கிரீடத்திற்கு நான் தகுதியானவள் என்று கருதும் அளவுக்கு இந்த நிலைக்கு வருவதற்கு நான் நிறைய வேலை செய்துள்ளேன். முந்தைய வெற்றியாளர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நடிகையும், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஊர்வசி ரவுத்தாலா கூறுகையில், இந்த ஆண்டு மீண்டும் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை இந்தியா வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.