search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கன்டெய்னர் வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.6½ கோடி தங்கம், வெள்ளி பொருட்கள்- டிரைவர் தப்பி ஓடியதால் பரபரப்பு
    X

    கன்டெய்னர் வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.6½ கோடி தங்கம், வெள்ளி பொருட்கள்- டிரைவர் தப்பி ஓடியதால் பரபரப்பு

    • கன்டெய்னர் வேனை பறிமுதல் செய்து டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்டதா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் சேர்ந்து சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா எம்.சி.ஹள்ளி அருகில் போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சிறிய கன்டெய்னர் வேன் வந்தது. இதை பார்த்த அதிகாரிகள் கன்டெய்னர் வேனை நிறுத்தும்படி கைஅசைத்தனர்.

    இதை பார்த்த டிரைவர், சிறிது தூரத்திலேயே கன்டெய்னர் வேனை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசாரும், அதிகாரிகளும், கன்டெய்னர் வேனில் சோதனையிட்டனர்.

    இதில் 17 கிலோ 40 கிராம் எடையிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 44 லட்சம் ஆகும்.

    இதுதொடர்பாக தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்டெய்னர் வேனை பறிமுதல் செய்து டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்டதா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×