search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இன்று நடக்க இருந்த பாராளுமன்ற குழு கூட்டம்.. ஆப்சென்ட் ஆன மாதபி புச்.. அடுத்து என்ன?
    X

    இன்று நடக்க இருந்த பாராளுமன்ற குழு கூட்டம்.. ஆப்சென்ட் ஆன மாதபி புச்.. அடுத்து என்ன?

    • மாதபி புச், அவரது கணவர் பங்குகளை வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
    • குற்றச்சாட்டுக்களை மாதபி புச் மற்றும் அவரது கணவர் திட்டவட்டமாக மறுத்தனர்.

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன் பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. அதில் அகானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பங்குகளை வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனினும், இந்த குற்றச்சாட்டுக்களை மாதபி புச் மற்றும் அவரது கணவர் திட்டவட்டமாக மறுத்தனர். மேலும் தங்களின் வாழ்க்கை மற்றும் நிதி பரிமாற்றங்கள் திறந்த புத்தகம் போன்றது என்று அவர்கள் கூறினர். எனினும், இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை விசாரிக்க பாராளுமன்ற குழு அமைக்க வலியுறுத்தின.

    அதன்படி காங்கிரஸ் எம்.பி.யும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையிலான பாராளுமன்ற குழு முன் செபி தலைவர் மாதபி புச் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியிருந்தது.

    எனினும், இன்று நடைபெற இருந்த பாராளுமன்ற குழு கூட்டத்தில் மாதபி புச் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்றைய கூட்டம் மற்றொரு தேதிக்கு ஒத்திவைத்து பாராளுமன்ற குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "முதல் கூட்டத்திலேயே, நாங்கள் எங்களது ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்ய முடிவெடுத்திருக்கிறோம். செபி மறு ஆய்வுக்கான கூட்டத்தை கூட்டியிருந்தோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு வேண்டும் என கோரினர், நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தோம். அதன்பிறகு, அவர்கள் ஆஜராவதாக உறுதியளித்தனர்."

    "எனினம், இன்று காலை 9.30 மணி வாக்கில் செபி தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் எங்களை தொடர்பு கொண்டு தனிப்பட்ட அவசரநிலை காரணமாக இன்று டெல்லிக்கு பயணம் செய்ய இயலாது என்று தெரிவித்தனர். ஒரு பெண்ணிடம் இருந்து இந்த கோரிக்கை வந்துள்ளதால், நாங்கள் இன்றைய கூட்டத்தை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க முடிவு செய்திருக்கிறோம்," என்றார்.



    Next Story
    ×