என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
33- வது நினைவு நாள்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, தலைவர்கள் அஞ்சலி
- நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
- ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21- ந்தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33- வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி எம்.பி, ராகுல் காந்தி எம்.பி, ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் பங்கேற்றார்.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21- ந்தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதமர் மோடி எக்ஸ் வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளில் அவருக்கு எனது அஞ்சலிகள் என தெரிவித்துள்ளார்.