search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த விமான நிறுவன பெண் ஊழியர் கைது
    X

    சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த விமான நிறுவன பெண் ஊழியர் கைது

    • அனுராதா ராணி சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்தார்.
    • எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கன்னத்தில் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவர் அறைந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றுபவர் அனுராதா ராணி. இவர் நேற்று அதிகாலை சக ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை நிறுத்தி, விமான நிலைய நுழைவுவாயிலில் விமான குழுவினரிடம் ஸ்கிரீனிங் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் அதிகரித்தது. அப்போது அனுராதா ராணி சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அனுராதா ராணியிடம் சரியான விமான நிலைய நுழைவு அனுமதி இருந்தது. ஆனால் அவர் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளால் தகாத வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையை அணுகி உள்ளோம். இந்த விஷயத்தில் எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவையும் வழங்குகிறோம் என்றார்.

    Next Story
    ×