search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எச்1பி விசாதாரர்களின் துணைவியர் பணிபுரிய தடை இல்லை- கோர்ட்டு தீர்ப்பு
    X

    எச்1பி விசாதாரர்களின் துணைவியர் பணிபுரிய தடை இல்லை- கோர்ட்டு தீர்ப்பு

    • ஒபாமா ஆட்சி காலத்தில் எச்1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது.
    • அனுமதியை எதிர்த்து சேவ் ஜாப்ஸ் அமெரிக்க அமைப்பு, மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    அமெரிக்காவில் எச்1பி விசா மூலம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவார்கள். இதற்கிடையே ஒபாமா ஆட்சி காலத்தில், எச்1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியை எதிர்த்து சேவ் ஜாப்ஸ் அமெரிக்க அமைப்பு, மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணைகள் முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    அந்த அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, எச்1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று தீர்ப்பளித்தார். நீதிபதி தனது உத்தரவில், "சேவ் ஜாப்ஸ் அமைப்பின் முதன்மை வாதமாக எச்1பி விசா வைத்திருப்பவர்கள் போன்ற வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கியிருக்கும் போது பணிபுரிய அனுமதிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு பாராளுமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்தது. ஆனால் குடியேற்றம் மற்றும் குடியுரிமை சட்டத்தின் உரை, வெளிப்படையாக மற்றும் மறைமுகமாக பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குள் செல்கிறது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு பாராளுமன்றம் வெளிப்படையாக தெரிந்தே அதிகாரம் அளித்துள்ளது" என்று கூறினார்.

    Next Story
    ×