என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நடிகர் நாகர்ஜுனாவின் 16 வீடுகள் கட்டுமான பணிக்கு அதிகாரிகள் திடீர் தடை
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா.
- நடிகர் நாகர்ஜுனாவின் 16 வீடுகள் கட்டுமான பணிக்கு அதிகாரிகள் திடீர் தடை விதித்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா கோவா மாநிலம், மாண்ட் ரெம் பஞ்சாயத்துகுட்பட்ட மலையை ஒட்டிய பிராப் எர்டி பகுதியில் பல ஏக்கரில் நிலம் வாங்கி உள்ளார். அங்கு 16 வீடுகள் மற்றும் ரெஸ்ட்ரான்ட் கட்டுவதற்கு மாண்ட் ரெம் பஞ்சாயத்தில் தற்காலிகமாக அனுமதி வாங்கி இருந்தார்.
அந்த இடத்தில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனை ஆய்வு செய்த பஞ்சாயத்து அதிகாரிகள் அந்த இடத்தில் பல இடங்களில் மிக ஆழமான துளைகள் போடப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் எந்த வகையான கட்டிடம் கட்டப்பட உள்ளது என்ற விவரம் அடங்கிய பெயர் பலகை எதுவும் வைக்கவில்லை.
இதையடுத்து அதிகாரிகள் கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என நாகார்ஜுனாவிற்கு நோட்டீஸ் அனுப்பினர். நோட்டீசை கண்ட நாகார்ஜுனா அதிர்ச்சி அடைந்து உடனடியாக பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு பதில் மனு அனுப்பினார். அதில் தொழில் தொடங்குவதற்காக கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் இதற்காக பஞ்சாயத்து அலுவலகத்தில் தடையில்லா அனுமதி வாங்கி உள்ளதாகவும், பணி நிறுத்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
ஆனால் நாகார்ஜுனா அனுமதி வாங்கியதற்கான எந்தவிதமான பதிவேடும் பஞ்சாயத்து அலுவலகத்தில் இல்லாததால் மேற்கொண்டு பணியை தொடர அனுமதி வழங்க முடியாது என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். நீதிமன்றம் அணுகி அனுமதி பெற்று கட்டுமான பணியை தொடங்குங்கள் அதுவரை கட்டுமான பணியை தொடர அனுமதி கிடையாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கட்டுமான பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டுமான பணி தாமதம் காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், கட்டுமான பணிக்கு தடை விதித்தால் மேலும் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.