search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்க்கண்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஜார்க்கண்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

    • ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பாதுகாப்பு படை வீரர்களும், போலீசாரும் நடத்திய என்கவுண்டரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ராஞ்சி:

    சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அட்டூழியம் அதிகமாக இருக்கிறது. நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர்.

    பாதுகாப்பு படை வீரர்களும், போலீசாரும் நடத்திய என்கவுண்டரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் 2 பேரது தலைக்கு தலா ரூ.25 லட்சமும், 2 பேருக்கு தலா ரூ.5 லட்சமும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

    Next Story
    ×