search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாலை வசதி இல்லை: டோலியில் மலை கிராம பெண்ணுக்கு பிரசவமான பரிதாபம்- தவறி விழுந்த குழந்தை
    X

    கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி வந்த காட்சி.

    சாலை வசதி இல்லை: டோலியில் மலை கிராம பெண்ணுக்கு பிரசவமான பரிதாபம்- தவறி விழுந்த குழந்தை

    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லை.
    • மழையில் இருந்து கீழே வரும் ஒத்தையடி பாதை செங்குத்தாகவும் மழை பெய்துள்ளதால் வழுக்கும் படியும் இருந்ததால் ராதாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் விடியும் வரை காத்திருந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், நிட்டாமாமிடி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவருக்கு நேற்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. மலை கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லை. மழையில் இருந்து கீழே வரும் ஒத்தையடி பாதை செங்குத்தாகவும் மழை பெய்துள்ளதால் வழுக்கும் படியும் இருந்ததால் ராதாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் விடியும் வரை காத்திருந்தனர். ராதா பிரசவ வலியால் அலறி துடித்தார்.

    இதையடுத்து காலை 8 மணிக்கு ராதாவை டோலியில் கட்டி தூக்கிகொண்டு நடக்க ஆரம்பித்தனர். 15 கி.மீ., தூரம் சென்றதும், ராதாவுக்கு பிரசவ வலி அதிகமாகி நடுவழியில் சென்றபோது டோலியில் இருந்த ராதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை டோலியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் கண் அருகே காயம் ஏற்பட்டது.

    பின்னர் ராதா மற்றும் குழந்தையை டோலியில் தூக்கி கொண்டு மலை அடிவாரத்திற்கு வந்தனர்.

    அங்கு 108 ஆம்புலன்ஸ் இவர்களுக்காக காத்திருந்தது. 108 ஊழியர்கள் குழந்தைக்கும், பெண்ணுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, குழந்தை மற்றும் தாய் இருவரையும் படேருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    தாய் மற்றும் சேயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் எங்கள் கிராமங்களுக்கு சரியான சாலை வசதி இல்லை. மருத்துவ உதவி கிடைப்பதில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். சாலை வசதி குறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் பல முறை புகார் அளித்தோம். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை என்று மலை கிராம மக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×