என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சூரஜ் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்- பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
- ஜாமின் மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது.
- மாதத்தின் ஒவ்வொரு 2-வது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.
பெங்களூரு:
எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ.வின் மூத்த மகன் சூரஜ் ரேவண்ணா (வயது 37). டாக்டரான இவர் தற்போது எம்.எல்.சி.யாக உள்ளார். இந்த நிலையில் சூரஜ் ரேவண்ணா, தனது கட்சி தொண்டர் உள்பட 2 பேரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகார்களின்பேரில் ஒலேநரசிப்புரா போலீசார் கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி சூரஜ் ரேவண்ணாவை கைது செய்தனர்.
இந்த வழக்குகள் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அவர்கள் சூரஜ் ரேவண்ணாவை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில், சூரஜ் ரேவண்ணா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன் மீதான முதல் பாலியல் வழக்கில் ஜாமின் கேட்டு பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் சூரஜ் ரேவண்ணா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சூரஜ் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவருக்கு கோர்ட்டு தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது ஜாமின் பெற்று வெளியே வந்த பிறகு புகார் அளித்த நபரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்ட கூடாது. மாதத்தின் ஒவ்வொரு 2-வது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.
அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஆஜராகி இருக்க வேண்டும். மேலும் ரூ.2 லட்சத்திற்கு டெபாசிட் தொகையை உத்தரவாதமாக செலுத்துவது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. முதல் வழக்கில் ஜாமின் கிடைத்தாலும் சூரஜ் ரேவண்ணா 2-வது பாலியல் வழக்கில் கைதாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.